தாழ்மை என்பது…மாதிரி

தாழ்மை என்பது…

7 ல் 1 நாள்

உங்களுக்கு இது மிகவும் தேவையானது…

சில சமயங்களில், உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறித்த தெளிவான மற்றும் சுருக்கமான வழிமுறைகளைப் பெற்றுக்கொள்வது நல்லது. வேதாகமத்தில் ஏராளமான உத்வேகமும், சிறந்த ஆவிக்குரிய, பரிசுத்தமான வாழ்க்கையை வாழ்வதற்கான எண்ணற்ற வழிகள் நிறைந்துள்ளதால், சில நேரங்களில் அது அதிகப்படியாக உணரப்படலாம்.

தீர்க்கதரிசி மீகா முன்வைத்த எளிய மூன்று அம்சத் திட்டம் எனக்குப் பிடிக்கும்:

“நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்?”– மீகா 6:8 TAOVBSI

இந்த வாரம், நாம் குறிப்பாக கடைசிப் பகுதி—அதாவது மனத்தாழ்மையாய் நடப்பது என்றால் என்ன என்பதில் கவனம் செலுத்தப் போகிறோம்.

இப்போது, ​​மனத்தாழ்மை என்பது மிகவும் மகிழ்ச்சியூட்டும் ஒரு தலைப்பு அல்ல என்பதை நான் அறிவேன். மாறாக, விடுதலை, மீட்பு அல்லது குணம்பெறுதலை பற்றிப் படிப்பது மிகவும் உற்சாகமாக இருக்கும் அல்லவா? எனக்குப் புரிகிறது. இது நாம் தவிர்க்க விரும்பும் ஒரு தலைப்பு, ஏனென்றால், நம்முடைய சொந்த தாழ்மையின்மை நமக்கு குற்றவுணர்வை ஏற்படுத்துவதாக இருக்கலாம்.

நாம் அனைவரும் அதிக செல்வாக்கு உள்ளவர்களாக இருக்க விரும்புகிறோம், ஆனால் அதிக தாழ்மையுள்ளவர்களாக மாறுவது அவ்வளவு உற்சாகமாகம் அளிப்பதாக இல்லை.

நாம் இந்த தலைப்பை ஆராய துவங்குவதற்கு முன், முதலில் உங்களுக்கு ஊக்கமளிக்கக்கூடிய சில விஷயங்களை நான் சொல்ல விரும்புகிறேன். வேதாகமம் நம்மைத் தாழ்மையாக இருக்கச் சொல்கிறது என்பதைத் தவிர, மனத்தாழ்மையை நாம் ஏன் பின்பற்ற வேண்டும் என்பதற்கான பல நல்ல காரணங்களையும் வழங்குகிறது. மனத்தாழ்மை ஆசீர்வாதத்திற்கான ஒரு வழியாகும் மற்றும் நம்பமுடியாத பலன்களைத் தருவதாகும்:

"தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்". – நீதிமொழிகள் 22:4 TAOVBSI
"கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்". – யாக்கோபு 4:10 TAOVBSI
"கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை". – நீதிமொழிகள் 15:33 TAOVBSI
"கர்த்தர் தம்முடைய ஜனத்தின்மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்". – சங்கீதம் 149:4 TAOVBSI

நாம் இந்த வாரத்தில் அடியெடுத்து வைக்கையில், தாழ்மையை குறித்து சிந்தித்து உற்சாகமடைவோம்!

நீங்கள் இதைப் படித்துவிட்டு, “தாழ்மையா?, அது மிகவும் சலிப்பானது!” என்று நினைத்தால், நீங்கள் உணருவதை விட உங்களுக்கு அது அதிகமாகத் தேவைப்படலாம் 😉, மேலும் அதில் உறுதியாக நிலைத்திருக்குமாறு உங்களுக்கு நான் சவால் விடுகிறேன்.

மேலும் உங்களுக்கு ஒரு சிறந்த ஆசிரியர் உண்டு! இயேசு உங்களை அழைக்கிறார்:

“நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.” – மத்தேயு 11:29 TAOVBSI

நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? நாளை சந்திப்போம்!

நீங்கள் ஒரு அதிசயம்!

Cameron Mendes

குறிப்பு: இந்த திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்.

இந்த திட்டத்தைப் பற்றி

தாழ்மை என்பது…

தாழ்மை என்பது... நமக்குப் பிடித்தமான பாடமல்ல! ஆனால் அது வேதாகமத்தில் மீண்டும் மீண்டும் வரும் ஒரு கருப்பொருளாகும், மேலும் அது ஆசீர்வாதங்களுடனும் பெரிய வாக்குறுதிகளுடனும் வரும் ஒரு சிறப்பியல்பு.

More

இந்த திட்டத்தை வழங்கிய Jesus.net - Desi க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: ta.jesus.net/a-miracle-every-day/miracle