கிதியோனின் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்மாதிரி

கிதியோனின் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

7 ல் 1 நாள்

நீங்கள் மேலும் உங்களைப் பிரச்சனையில் சிக்கவைத்துக் கொள்கிறீர்கள்!

உங்களது வார இறுதி நாட்களை நீங்கள் நன்றாகக் கழித்தீர்கள் என்று நான் நம்புகிறேன். நீங்கள் எங்களுடன் இணைந்திருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், ஆண்டவருடனும் மற்றும் எங்கள் அதிசயம் குடும்பத்தினருடனும் சேர்ந்து உங்களது இந்த வாரத்தைத் தொடங்க ஆயத்தமாக இருப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

புதிய தொடரை வாசிக்கும்படி, நீங்கள் உற்சாகமாக இருக்கிறீர்களா? இந்த வாரம், கிதியோனின் வாழ்க்கையை நாம் ஆராய்ந்து பார்ப்போம்.

குழப்பம் மற்றும் மீண்டும் மீண்டும் அதே சம்பவங்கள் நடந்த காலத்தில் இருந்த அவரது கதையை நீங்கள் நியாயாதிபதிகள் புத்தகத்தில் வாசிக்கலாம். இஸ்ரவேல் ஜனங்களுக்கு ராஜா இல்லை, அவர்கள் ஒரே மாதிரியான விதத்தில் அழிவை தொடர்ந்து சந்தித்துக்கொண்டே இருந்தனர்:

குழப்பம் மற்றும் ஒடுக்கப்படுதல் ➡️ உதவிக்காக ஆண்டவரிடத்தில் கூக்குரலிடுதல் ➡️ ஒரு தலைவர் அல்லது நியாயாதிபதி மூலம் ஆண்டவரால் விடுவிக்கப்படுதல் ➡️ சமாதானம் மற்றும் செழிப்பு ➡️ சீர்கேட்டுக்கு நேராக மெதுவாக செல்லுதல் ➡️ குழப்பம் மற்றும் ஒடுக்கப்படுதலை மீண்டும் அனுபவித்தல்.

உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்றா? 🤔 இஸ்ரவேலர்களைப் பார்த்து, "சரி, என்ன நடக்கிறது என்பது உங்களுக்குப் புரியவில்லையா?! ஏன் அதே தவறுகளை மீண்டும் மீண்டும் செய்து கொண்டே இருக்கிறீர்கள், அதே சுழற்சியை மீண்டும் மீண்டும் அடைகிறீர்கள்?" என்று நினைப்பது எளிது.

ஆனால் உண்மை என்னவென்றால்: நாமும் அதைத்தான் செய்கிறோம்.

வாழ்க்கை கடினமாக இருக்கும்போது, ​​நாம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஜெபிக்கிறோம். ஆனால் காரியங்கள் அனைத்தும் சரியாக நடக்கும்போது, ​​சௌகரியமாக வாழ்ந்து, திசை மாறிச் செல்கிறோம், மற்றும் மெதுவாக ஆண்டவரிடமிருந்து விலகிச் செல்வதும் எளிதாகிறது. அப்போதுதான் பாவமும் மற்ற தீமைகளும் உள்ளே நுழைய முடிகிறது.

வேதாகமம் இதை நமக்கு எச்சரிக்கிறது:

"ஆகையால், நீ புசித்துத் திருப்தியடைந்திருக்கையில், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த அந்த நல்ல தேசத்துக்காக அவரை ஸ்தோத்திரிக்கக்கடவாய். உன் தேவனாகிய கர்த்தரை மறவாதபடிக்கும், நான் இன்று உனக்கு விதிக்கிற அவருடைய கற்பனைகளையும் நியாயங்களையும் கட்டளைகளையும் கைக்கொள்ளாமற் போகாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு." (உபாகமம் 8:10-11,TAOVBSI).

நமது பரிபூரணத்தில் ஆண்டவரை மறக்காமல் இருக்கிறோம் என்பதை நாம் எப்படி உறுதிசெய்வது? அவருக்கு நன்றி செலுத்துவதன் மூலம் நாம் அதை உறுதி செய்யலாம்!

“எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது.” (1 தெசலோனிக்கேயர் 5:16-18, TAOVBSI).

நீங்கள் ஒரு அதிசயம்!

Cameron Mendes

குறிப்பு: இந்த திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்.

இந்த திட்டத்தைப் பற்றி

கிதியோனின் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

ஒரு தன்னம்பிக்கையற்ற மற்றும் பயம் நிறைந்த சிறுவனிலிருந்து, ஒரு தைரியமான மற்றும் வலிமைமிக்க போர்வீரனாக, பிறகு பல தவறுகளுக்கு வருந்திய ஒரு மனிதனாக... கிதியோன் ஒரே வாழ்க்கையில் ஐந்து வாழ்க்கைகளை வாழ்ந்ததாகத் தோன்றுகிறது. மனித பலவீனங்கள் இருந்தபோதிலும் ஆண்டவர் நம்மை எப்படிப் பயன்படுத்துகிறார் என்பதை இந்தத் திட்டம் ஆராய்கிறது.

More

இந்த திட்டத்தை வழங்கிய Jesus.net - Desi க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: ta.jesus.net/a-miracle-every-day/miracle