கவலைப்படாதீர்கள் சந்தோஷமாய் இருங்கள் – பிலிப்பியர் 4:6-7மாதிரி

கவலைப்படாதீர்கள் சந்தோஷமாய் இருங்கள் – பிலிப்பியர் 4:6-7

7 ல் 1 நாள்

கவலை வேண்டாம், மகிழ்ச்சியாக இருங்கள்! 😎

"Don’t Worry, Be Happy" என்ற பாடலை நீங்கள் எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா? அது மனதைக் கவரும் இசைக் கொண்ட பாடல்களில் ஒன்று, அது உங்கள் மனதில் எளிதாக ஒட்டிக்கொள்ளும்.

இந்த பாடலை எழுதிய பாபி ஒரு விசுவாசியா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் "கவலைப்படாதே" என்ற அந்த எளிய வார்த்தைகளில் ஒரு ஆழமான வேதாகம சத்தியத்தை அவர் பதிவு செய்திருக்கிறார்.

இந்த வாரம், கவலையை விடுவிப்பதில் கவனம் செலுத்துவோம். அதற்கு வழிகாட்டியாக பிலிப்பியர் 4:6-7-ஐப் (TAOVBSI) பார்க்கலாம். இது எனக்கு மிகவும் பிடித்த வசனங்களில் ஒன்று:

"நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்." - பிலிப்பியர் 4:6-7, TAOVBSI.

சமீபகாலமாக நீங்கள் எதைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?

  • நிதி நிலைமையைப் பற்றிய கவலையா?
  • பள்ளி அல்லது பணியிடச் சாதனைகளைப் பற்றியதா?
  • உங்கள் ஆரோக்கியம் அல்லது உங்கள் பிள்ளைகளின் ஆரோக்கியத்தைப் பற்றியதா?
  • நிச்சயமற்ற எதிர்காலத்தைப் பற்றியதா?

சிரமங்கள் பெரும்பாலும் வெளியில் இருந்து வந்தாலும், கவலைகள் உள்ளே இருந்து நம்மைத் தாக்குகின்றன.

உங்களிடம் எனக்கு இன்னொரு கேள்வி உள்ளது: நீங்கள் கவலைப்படுவதை நிறுத்திவிட்டால், உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்?

நான் பொறுப்பற்றத்தனமாக அல்லது முதிர்ச்சியற்றவனாக/வளாக இருக்கச் சொல்லவில்லை. உங்களால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களை விட்டுவிடச் சொல்கிறேன்.

இயேசு நம்மைப் பொறுப்புகளை விடுவித்துவிட்டு, அதற்க்கு பதிலாக அவரை நம்புமாறு அழைக்கிறார்:

“பின்னும் அவர் தம்முடைய சீஷரை நோக்கி: இப்படியிருக்கிறபடியினால், என்னத்தை உண்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். [...] கவலைப்படுகிறதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?” - லூக்கா 12:22, 25,TAOVBSI.

கவலைப்படுவதால் எந்த நன்மையும் இல்லை.

கோரி டென் பூம் இதை மிக அழகாகச் சொன்னார்:

"கவலை நாளைய துக்கத்தை வெறுமையாக்குவதில்லை; அது இன்றைய வலிமையை வெறுமையாக்குகிறது."

இன்று ஆண்டவரிடம் உங்களது கவலைகள் அனைத்தையும் ஒப்படைக்கத் தேவையான பலத்தை அவர் உங்களுக்குத் தரும்படி கேளுங்கள். அவர் அனைத்தையும் சுமக்கப் போதுமானவர்.

நீங்கள் ஒரு அதிசயம்!

Jenny Mendes

இந்த திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்.

இந்த திட்டத்தைப் பற்றி

கவலைப்படாதீர்கள் சந்தோஷமாய் இருங்கள் – பிலிப்பியர் 4:6-7

ஒரு மிகவும் பிரபலமான பாடல் (Don't worry, be happy), வேதாகமம் நமக்கு காலம் காலமாக சொல்லிவரும் உண்மையை மிகவும் அழகாக வெளிப்படுத்துகிறது. கவலைப் படுவதினால் ஒரு நன்மையையும் இல்லை. இந்த வாசிப்புத் திட்டத்தில், கவலை இல்லாத ஒரு வாழ்க்கைக்கான படிப்படியான வழிமுறைகளைக் கண்டறிய, நாம் பிலிப்பியர் 4:6-7 வசனங்கள் வழியாக கடந்து செல்வோம்.

More

இந்த திட்டத்தை வழங்கிய Jesus.net - Desi க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: ta.jesus.net/a-miracle-every-day/miracle

சம்பந்தப்பட்ட திட்டங்கள்