மனம் புதிதாகிறதினாலே ....தேவசித்தம் பகுத்தறியலாம் - வாங்க. ரோமர் :12-2 சகோதரன் சித்தார்த்தன்மாதிரி

மனம் புதிதாகிறதினாலே ....தேவசித்தம் பகுத்தறியலாம் - வாங்க.  ரோமர் :12-2    சகோதரன் சித்தார்த்தன்

3 ல் 3 நாள்

உலகம் என் பின்னே; சிலுவை என் முன்னே என்ற அர்த்தம் நிறைந்த பாடல் உண்டு. We are in the world ; But we are NOT of the world. என்றும் அறிந்திருக்கிறோம்.

உலகத்தின் கருத்து : சுயத்தைச் சார்ந்திரு; உன்னை நீயே முன்னேற்றிக்கொள் [Self – Improvement] ஆனால், தேவசித்தம் : என்னில் விசுவாசமாயிரு.

உலகத்தின் கருத்து : உன் மனசு விரும்பினதைச் செய். ஆனால், தேவசித்தம் : உன் மனசு உன்னை வஞ்சிக்கும்; ஆகையால் என் வார்த்தைகளைப் பின்பற்று.

உலகத்தின் கருத்து : நீ கண்டால் தான் உண்மை.

ஆனால், தேவசித்தம் : விசுவாசித்து நட அப்பொழுது நீ காண்பாய்.

மனிதனுடைய சுயமுன்னேற்ற கருத்துக்கள் – மனிதனின் சுய தர்க்கவாதங்களை [LOGIC] சார்ந்தவை. உங்கள் காலில் அணிந்திருக்கும் ஷுவின் கயிற்றினைப் பிடித்துக்கொண்டு உங்களை நீங்களே எப்படி உயரத் தூக்கமுடியாதோ அப்படியே சுயமுன்னேற்றக் கருத்துக்களும் இருக்கின்றன... அந்த நேரத்திற்கு ஓர் உற்சாகத்தை தரலாம்.... ஆனால், மனிதனின் உண்மையான முன்னேற்றம் தேவாதி தேவனின் கரத்தால் மட்டுமே ஆகும். இதற்கு நல்ல உதாரணம் யோசேப்பு- குழியில் தூக்கி எறியப்பட்டவனை பார்வோனுக்கு அடுத்த ஸ்தானத்துக்கு புரமோஷன்....தூக்கிஎறிப்ப்பட்ட நிலையில் உதாசீனம் செய்யப்பட்ட நிலையில் உங்கள் வாழ்க்கையா?

என் தேவன் யோசேப்பின் தேவன் - யோசேப்பை உயர்த்தியவர் என்னையும் உயர்த்துவார் என்று விசுவாசியுங்கள். நிச்சயம் மேன்மை எதிர்பாராத வழிகளில் வரும் என்று உரத்தசத்தமாய் அறிக்கையிடுங்கள்.

தேவனுடைய வழிகள் மேலானவை; அவருடைய ஞானம் அளவிட முடியாது. அவருடைய சத்தியம் நித்தியம்.

உலகத்தின் கருத்து: – [ஆங்கிலத்தில் BREAKTHROUGH] - பெருவளர்ச்சி, தடைமுறிவு அல்லது திருப்புதலான சம்பவங்கள் சுயமுயற்சி [SELF EFFORT] ஆல் வருகின்றது என்ற சிந்தனையில்-சிக்கி அதில் சுழன்று வருகின்றவர்களாக இன்னும் இருக்கிறீர்களா?

ஆனால், தேவாதி தேவன் சொல்வது: சரணடைவதினால் மறுரூபம் / மாற்றம் வருகிறது.

உலகத்தின் கருத்து: – நீங்கள் எல்லாத்தையும் சேர்த்துக்கிட்டா - சமாதானம். ஆனால், தேவாதிதேவன் சொல்வது: உனக்கு என்னவெல்லாம் வேண்டுமோ -அதை நான் தருவேன் என்று விசுவாசிப்பதினால் வருவது - சமாதானம்.

உலகம் கற்றுத்தருவது : பயம்....தோத்துபோவேன்னு பயம், எதிர்காலத்தைப்பத்தின பயம், போதுமானவனா / போதுமானவளா இல்லைன்னு பயம்.

ஆனால், தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார் [ 2தீமோ.1:7] என்றே தேவனுடைய வார்த்தை நமக்கு கற்றுத்தருகிறது.

இப்போது ”உலகத்தில் நாம் இருந்தாலும் - நாம் உலகத்தார் இல்லை” என்பதன் அர்த்தம் உங்களுக்கு புரிந்திருக்கும்...

சுருக்கமாகச் சொன்னால், உலகத்தின் கருத்துக்கள் நம்மை சாதாரண வாழ்க்கை வாழச்செய்யும்.... ஆனால்,தேவனின் வார்த்தை - நம்மை இயற்கைக்கு அப்பாற்பட்ட வாழ்க்கை வாழும்படி அழைத்துச் செல்லும்....

இதுவே உங்களைக் குறித்த தேவனுடைய நன்மையும், பிரியமும், பரிபூரணமுமான சித்தம் – [ரோமர் 12:2]

வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

மனம் புதிதாகிறதினாலே ....தேவசித்தம் பகுத்தறியலாம் - வாங்க.  ரோமர் :12-2    சகோதரன் சித்தார்த்தன்

யுத்தம் என்றால் அது நாடுகளுக்கு இடையே நடப்பது என்று நினைக்காதிருங்க. அனுதினமும் சத்துரு நம் சிந்தையில்– பயம் சந்தேகத்தால் நிரப்பி உலகத்துக்கு ஒத்த வேஷம் தரித்தவர்களாக வாழு என போராடுகிறான். பட்டயமும் பீரங்கியும் வைத்து நடைபெறும் யுத்தம் அல்ல - இந்த யுத்தம்; இது நம் எண்ணங்களில் அனுதினமும் நடைபெறும் ஒரு யுத்தம்.... ஆனால், நமது தேவன் - புதிய மனம்; மறுரூபம் அல்லது முற்றிலும் மேம்பட்ட வாழ்க்கை வாழும்படி நம்மை அழைத்திருக்கின்றார். இப்பூவுலகில் வாழும் நாம்- பரலோகத்தின் சிந்தைகளை யோசித்துக் கொண்டு இருப்போமானால் நம் மனம் புதிதாகியது என்று அர்த்தம். உங்கள் எண்ணங்கள் தான் உங்களைச்சுற்றி என்ன நடக்கின்றது என்பதை தீர்மானிக்கின்றது. எதைப்பற்றி நீங்கள்-கருத்து முரண்படாமல்- நினைக்கிறீர்களோ அதுதான் - உங்கள் விசுவாசம் ஆக இருக்கும், நீங்கள் போகின்ற திசையை தீர்மானிக்கும் - உங்களைப் பற்றி ”தேவன் தாமே குறித்திருக்கிறவைகளை” - அவருடைய பரிபூரணமான சித்தத்தை உங்கள் வாழ்க்கையில் நிறைவேற்றும் வாங்க - மறுரூபமான வாழ்க்கைக்குள் பிரவேசிக்கலாம்.

More

இந்த திட்டத்தை வழங்கிய Anchor Ministries க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.bible.com/organizations/36ac5974-dac1-4d19-82b1-3a0fa597751d