மனம் புதிதாகிறதினாலே ....தேவசித்தம் பகுத்தறியலாம் - வாங்க. ரோமர் :12-2 சகோதரன் சித்தார்த்தன்மாதிரி

மனம் புதிதாகிறதினாலே ....தேவசித்தம் பகுத்தறியலாம் - வாங்க.  ரோமர் :12-2    சகோதரன் சித்தார்த்தன்

3 ல் 2 நாள்

நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம்.

இதிலே ஆவிக்கேற்றபடி நடத்தல் என்றால் என்ன?

உலகத்தினரைப் பாருங்கள் அவர்கள் செய்தி, சோஷியல் மீடியா வில் வரும் மற்றவர்களின் கருத்துக்களால் - என்ன சிந்திக்கவேண்டும், எதற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று பரப்புவர்களைப் போலவே - இருக்க, பயப்பட, கவலைப்பட என வடிவமைக்கப்பட்டு வருகின்றனர்.

ஆனால்,

தேவன் இந்த”முன்மாதிரி” யை விட்டு வெளியே வர வேண்டும்; நீங்க உங்க விசுவாச கண்களால் பார்ப்பதினால், வேறுவிதமாக- சிந்திக்க தேவன் அழைக்கின்றார்.

மனம் புதிதாகுதல் என்பது ஒரேஒருமுறை சம்பவிக்கும் சம்பவம் இல்லை.

அது அனுதினமும் சரணடையும் வாழ்க்கை; ஆவிக்கேற்றபடி வாழும் வாழ்க்கை. அனுதினமும் உலகம் என் சிந்தனைகளை வடிவமைக்க விடமாட்டேன் பதிலாக தேவன் / அவருடைய வார்த்தை - என்னை வடிவமைக்க விட்டுக்கொடுப்பேன் என்று தெரிந்தெடுக்கும் வாழ்க்கை.

உங்கள் சிந்தனையை சத்துருவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தால் - உங்கள் வாழ்க்கையை அவனால் கட்டுப்படுத்த முடியும் என்பது நன்றாகத் தெரியும். இதினிமித்தமே, உங்கள் மீது தொடர்ச்சியாக - பொய், பொய் பொய்யினை வீசி-தாக்கி வருகிறான். அவன் சொல்லும் பொய்களில் சில: 1. நீ நல்லவனே கிடையாது 2. உனக்கு பெலனே இல்லை3. நீ எல்லாம் இதுக்கு தகுதியானவனே இல்லை.

ஆனால்,

நீங்கள் மனம் புதிதாகும் போது அவன் சொல்லும் பொய்கள் இருக்கும் இடத்தில் தேவாதிதேவன்-அவரது சத்தியத்தால் நிரப்புகின்றீர்கள். உதாரணமாக, நீங்கள் அறிக்கையிடுவது இப்படியாக இருக்கும். 1. நான் முற்றும் ஜெயம் கொள்பவன். 2. நான் தெரிந்தெடுக்கப்பட்டவன்3. என்னை நேசிக்க ஒருவர் உண்டு. 4. நான் கிறிஸ்துவுக்குள் வெற்றி சிறந்தோன். 5. என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி என் குறைவுகளை நிறைவாக்குவார்.

6. இனிமேலும் என் கடந்தகால சங்கிலிகளால் - நான் கட்டப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. என் மனம் புதிதாகிற போது என் வருங்காலமும் புதிதாகும். உங்கள் விசுவாசம் பெலப்படும்.

உங்கள் வாழ்வின்நோக்கம் உங்களுக்கு வெளிப்பட்டு விட்டதால் -

இனிமேலும் இந்தப் பிரபஞ்சதிற்கு ஒத்த வேஷம் தரியாமல் – வாழ்வோம்.இதுவே உங்களைக் குறித்த தேவனுடைய நன்மையும், பிரியமும், பரிபூரணமுமான சித்தம் – [ரோமர் 12:2]

வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

மனம் புதிதாகிறதினாலே ....தேவசித்தம் பகுத்தறியலாம் - வாங்க.  ரோமர் :12-2    சகோதரன் சித்தார்த்தன்

யுத்தம் என்றால் அது நாடுகளுக்கு இடையே நடப்பது என்று நினைக்காதிருங்க. அனுதினமும் சத்துரு நம் சிந்தையில்– பயம் சந்தேகத்தால் நிரப்பி உலகத்துக்கு ஒத்த வேஷம் தரித்தவர்களாக வாழு என போராடுகிறான். பட்டயமும் பீரங்கியும் வைத்து நடைபெறும் யுத்தம் அல்ல - இந்த யுத்தம்; இது நம் எண்ணங்களில் அனுதினமும் நடைபெறும் ஒரு யுத்தம்.... ஆனால், நமது தேவன் - புதிய மனம்; மறுரூபம் அல்லது முற்றிலும் மேம்பட்ட வாழ்க்கை வாழும்படி நம்மை அழைத்திருக்கின்றார். இப்பூவுலகில் வாழும் நாம்- பரலோகத்தின் சிந்தைகளை யோசித்துக் கொண்டு இருப்போமானால் நம் மனம் புதிதாகியது என்று அர்த்தம். உங்கள் எண்ணங்கள் தான் உங்களைச்சுற்றி என்ன நடக்கின்றது என்பதை தீர்மானிக்கின்றது. எதைப்பற்றி நீங்கள்-கருத்து முரண்படாமல்- நினைக்கிறீர்களோ அதுதான் - உங்கள் விசுவாசம் ஆக இருக்கும், நீங்கள் போகின்ற திசையை தீர்மானிக்கும் - உங்களைப் பற்றி ”தேவன் தாமே குறித்திருக்கிறவைகளை” - அவருடைய பரிபூரணமான சித்தத்தை உங்கள் வாழ்க்கையில் நிறைவேற்றும் வாங்க - மறுரூபமான வாழ்க்கைக்குள் பிரவேசிக்கலாம்.

More

இந்த திட்டத்தை வழங்கிய Anchor Ministries க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.bible.com/organizations/36ac5974-dac1-4d19-82b1-3a0fa597751d