மனம் புதிதாகிறதினாலே ....தேவசித்தம் பகுத்தறியலாம் - வாங்க. ரோமர் :12-2 சகோதரன் சித்தார்த்தன்மாதிரி

மனம் புதிதாகிறதினாலே ....தேவசித்தம் பகுத்தறியலாம் - வாங்க.  ரோமர் :12-2    சகோதரன் சித்தார்த்தன்

3 ல் 1 நாள்

நீங்கள் எடுக்கிற ஒவ்வொரு தீர்மானமும், ஒவ்வொரு அடியும், ஒவ்வொரு தெரிந்தெடுப்பும் உங்கள் சிந்தனையில் இருந்தே ஆரம்பிக்கின்றது. உங்கள் சிந்தைகளில் சந்தேகம் நிரம்பி இருக்குமானால் உங்கள் வாழ்க்கை தயக்கங்களால் நிரம்பியிருக்கும். உங்கள் சிந்தையின் கவனம் பயத்தின் மீது இருக்குமானால்,உங்கள் வாழ்க்கை கவலையினால் தடுத்துப் போடப்படும்.

ஆனால்,

உங்கள் வாழ்க்கை விசுவாசத்தில் வேர்பற்றி இருக்குமானால் – உங்கள் வாழ்க்கைக்கு நோக்கம் இருக்கும். அதினால் தான் பரிசுத்த வேதாகமம் உன் செயல்களை முதலில்-திருத்து- என்று சொல்லவில்லை. உன் சிந்தை / மனம் புதிதாகட்டும்-முதலில் என்கிறது, இன்றைய தியான வசனத்தில் தலைமை பொறுப்பு ஏற்ற யோசுவாவிற்கு தேவாதி தேவன் சொன்ன வார்த்தை - இரவும் பகலும் வேதாகம வார்த்தைகளை தியானித்துக் கொண்டிரு...... பலன் : அப்பொழுது 1. நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய்; 2. அப்பொழுது புத்திமானாயும் நடந்து கொள்வாய். நாம் கவனிக்க வேண்டிய வார்த்தை ”அப்பொழுது” . ஆங்கிலத்தில் ”then” .... Thou shall make thy way PROSPEROUS, and“then” .... thou shall have “GOOD SUCCESS”. எல்லோருக்கும் பலன் ஆகிய ”என் வழி வாய்க்கப்பெற வேணும்; நான் புத்திமானா நடந்து கொள்ளணும் என்பதில் விருப்பம்.

நாம் விரும்புவதை பெற்றுக்கொள்ள ஒரேவழி – தேவவசனத்தை தியானித்து மனம் புதிதாகுவது மாத்திரமே. இதுவே உங்களைக் குறித்த தேவனுடைய நன்மையும், பிரியமும், பரிபூரணமுமான சித்தம் – [ரோமர் 12:2]

வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

மனம் புதிதாகிறதினாலே ....தேவசித்தம் பகுத்தறியலாம் - வாங்க.  ரோமர் :12-2    சகோதரன் சித்தார்த்தன்

யுத்தம் என்றால் அது நாடுகளுக்கு இடையே நடப்பது என்று நினைக்காதிருங்க. அனுதினமும் சத்துரு நம் சிந்தையில்– பயம் சந்தேகத்தால் நிரப்பி உலகத்துக்கு ஒத்த வேஷம் தரித்தவர்களாக வாழு என போராடுகிறான். பட்டயமும் பீரங்கியும் வைத்து நடைபெறும் யுத்தம் அல்ல - இந்த யுத்தம்; இது நம் எண்ணங்களில் அனுதினமும் நடைபெறும் ஒரு யுத்தம்.... ஆனால், நமது தேவன் - புதிய மனம்; மறுரூபம் அல்லது முற்றிலும் மேம்பட்ட வாழ்க்கை வாழும்படி நம்மை அழைத்திருக்கின்றார். இப்பூவுலகில் வாழும் நாம்- பரலோகத்தின் சிந்தைகளை யோசித்துக் கொண்டு இருப்போமானால் நம் மனம் புதிதாகியது என்று அர்த்தம். உங்கள் எண்ணங்கள் தான் உங்களைச்சுற்றி என்ன நடக்கின்றது என்பதை தீர்மானிக்கின்றது. எதைப்பற்றி நீங்கள்-கருத்து முரண்படாமல்- நினைக்கிறீர்களோ அதுதான் - உங்கள் விசுவாசம் ஆக இருக்கும், நீங்கள் போகின்ற திசையை தீர்மானிக்கும் - உங்களைப் பற்றி ”தேவன் தாமே குறித்திருக்கிறவைகளை” - அவருடைய பரிபூரணமான சித்தத்தை உங்கள் வாழ்க்கையில் நிறைவேற்றும் வாங்க - மறுரூபமான வாழ்க்கைக்குள் பிரவேசிக்கலாம்.

More

இந்த திட்டத்தை வழங்கிய Anchor Ministries க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.bible.com/organizations/36ac5974-dac1-4d19-82b1-3a0fa597751d

சம்பந்தப்பட்ட திட்டங்கள்