திட்ட விவரம்

குறிக்கோள் நிறைந்த வாழ்க்கையை வாழுங்கள்!மாதிரி

குறிக்கோள் நிறைந்த வாழ்க்கையை வாழுங்கள்!

7 ல் 1 நாள்

" தங்கச் சட்டம்"


அரசியல்வாதியோ, தொழிலதிபரோ, ஊக்கமூட்டும்   பேச்சாளரோ அல்லது ஏதேனும் ஒரு சாமானியனோ, எவராயினும் இந்தத்   தங்கச்சட்டத்தைக் குறித்துப் பேசியிருப்பார்கள்; செயல்   படுத்தியிருப்பார்கள். உண்மையில், அனேகமாக எல்லோரும்   இதனைக்கேள்விப்பட்டு, அர்த்தத்தையும் புரிந்து கொண்டிருப்பார்கள். 


அனேகர் " நமக்கே நாம் என்ன செய்கிறோமோ, அதையே பிறருக்கும்   செய்வது" என்பது நல்ல சமுதாயத்தின் ஒரு அத்தியாவசியமான அம்சமாகும்   என்பதை ஒத்துக்கொள்வார்கள். பலவகைகளில், இதுவே நமது கலாச்சாரம், குடும்பங்கள் மற்றும்   நட்புகளின் ஊடே இழையாய் ஊடுருவி ஒன்றிணைக்கிறது. இந்தத் தங்கச்சட்டம், மற்றவர்களுக்குச் சேவை செய்வது, மனப்பூர்வமாய் மற்றவர்களுக்குக்   கொடுப்பது, தேவையுள்ளோர்க்கு உதவுவது - இவற்றிலுள்ள   பின்புலமாயிருக்கிறது. 


வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்வின்   அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகிய இந்தத் தங்கச்சட்டத்தின் ஆசான் இயேசுவே.


கிறிஸ்தவர்களாகிய நாம்   தேவனிடத்தில் விசுவாசமாயிருப்பதோடு நின்றுவிடாமல், அதற்கு மேலும் விசுவாசத்தை இன்னொரு தளத்துக்கு எடுத்துச் செல்ல தேவன்   விரும்புகிறார். மற்றவர்களின் வாழ்வைத் தொடும்படியான கிரியைகளில் நமது   விசுவாசத்தை வெளிப்படுத்தி, இப்படியாக தேவனுடைய அன்பைபும்   கிருபையையும் அவர்களுக்குக் காட்டி தேவனை மகிமைப்படுத்துவதே தேவனுடைய ஆசை.   இதுதான் உண்மையிலே தங்கச்சட்டத்தின் படி நடத்தும் வாழ்க்கை.

வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

குறிக்கோள் நிறைந்த வாழ்க்கையை வாழுங்கள்!

மகிழ்ச்சியான, குறிக்கோள் நிறைந்த வாழ்க்கை, உறவுகளின் மேலும், அன்பு, விசுவாசத்தின் மேலும் கட்டியெழுப்பப்படுகிறது. உங்கள் வாழ்க்கைக்கான திட்டத்தைக் குறித்து   அதிகத்தெளிவு தேவையானால், உங்களது தேடுதலும், வெளிப்பாடுகளும் இன்...

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக நாங்கள் ட்வெயின் 20 நம்பிக்கைக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: http://www.twenty20faith.org/yvdev2

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்