bible icon

பைபிள் பயன்பாட்டின் வல்லமையை உங்கள் திருச்சபை ஆராதனைகளுக்குள் கொண்டு வாருங்கள்.

உங்கள் செய்தியுடன் ஈடுபடவும், அதனை மற்றவர்களுடன் பகிரவும் உங்கள் திருச்சபைக்கு தேவையான அனைத்தும் இதில் உள்ளன. இலவசமானது, காகிதமற்றது, ஏற்கனவே லட்சக்கணக்கான சாதனங்களில் நிறுவப்பட்டுள்ளது.

move down

உங்கள் செய்திகளிலிருந்து மேலும் அதிகம் பெற உங்கள் சமுதாயத்திற்கு உதவுங்கள்.

பங்கேற்பாளர்கள் பின் தொடரலாம், வேத வார்த்தையுடன் ஈடுபடலாம், குறிப்பெடுக்கலாம், எதிர்கால உபயோகத்திற்காக தங்கள் சொந்த நகலையும் சேமிக்கலாம்.

move down

அவர்களது திறன்பேசியில் உங்களது உள்ளடக்கம்.

செய்தி குறிப்புகள், அறிவிப்புகள், நிகழ்நிலை நன்கொடைக்கான இணைப்புகள்... உங்கள் திருச்சபையுடன் தொடர்புகொள்ள தேவையான எல்லாவற்றையும் பகிருங்கள் — 100% இலவசம்.

move down

உங்கள் மக்களை வேதாகமத்திற்குள் இன்னும் ஆழமாக நடத்துங்கள்.

உங்கள் சமூகத்தினர் தேவ வார்த்தையுடன் வாரம் முழுவதும் தொடர்புகொள்ள உதவும் வாசிப்புத்திட்டங்கள் மற்றும் தியானங்களை பரிந்துரை செய்யுங்கள்.

move down

வல்லமையானது குழப்பமானதாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.

இணையத்துடன் இணைக்கப்பட்ட எந்த Mac அல்லது PC இலிருந்து நிகழ்வுகளை எளிதாக உருவாக்குங்கள். ஒவ்வொரு நிகழ்வு பகுதியையும் சரியான இடத்தில் இழுத்து விட்டு வரிசைப்படுத்தவும், திருத்தவும், சரி செய்வதும் எளிதே.

நீங்கள் விரும்பும் வண்ணமே... நிகழ்வுகளை உருவாக்க தேவையான அனைத்தும்.

இசைவிணக்கமுடைய தொகுதிக்கூறுகள் உங்கள் நேரத்தையும் முயற்சியையும் மிச்சமாக்குகின்றன. கூறுகளை இணைத்து புது நிகழ்வுகளை உருவாக்கலாம். அல்லது, ஏற்கெனவேயுள்ள நிகழ்வுகளை தேவைக்கேற்ப மாற்றலாம். ஏற்கெனவேயுள்ள நிகழ்வின் பிரதியினின்று முற்றிலும் மாறுபட்ட குழுமங்களுக்கேற்ப மாற்றலாம். இவை அனைத்தின் போதும் நிகழ்வுகளை தங்கள் பங்கேற்பாளர்கள் எவ்விதம் காண்பார்களோ, அவ்விதமே, தங்களுக்கும் முற்காட்சி காண்பிக்கும்.

Text Module உரை தொகுதி

திட்டவரைவு, முக்கிய புள்ளிகள், விவாத கேள்விகள்... உங்கள் பங்கேற்பாளர்கள், உங்கள் செய்தியை பின்பற்றுவதற்கேதுவான எந்த ஒரு உரை சார்ந்த உள்ளடக்கத்தையும் நீங்கள் செய்தி அளிக்கும் போதே பகிரலாம்.

Bible References வேதாகம மேற்கோள்கள்

செய்தியில் நீங்கள் குறிப்பிடும் பகுதிகளை வேதாகம செயலியின் 1200+ பதிப்புகளில், 900+ மொழிகளில் காண்பிக்கலாம் — நகலெடுக்கவோ ஒட்டவோ அவசியம் இல்லை.

Reading Plans Module வாசிப்பு திட்ட தொகுப்பு

உங்கள் கற்பிக்கும் கருத்துகளுக்கு சம்பந்தப்பட்ட வேதாகம திட்டங்கள் மற்றும் தியானங்களுடன் இணைக்கவும், அது கவனிப்போர் தேவனுடைய வார்த்தையை வாரம் முழுவதும் தொடர்ந்து ஈடுபட உதவுகிறது.

External Links வலை இணைப்புகள் தொகுப்பு

நிகழ்நிலை நன்கொடை, தன்னார்வலர் தொடுப்பு. அல்லது திருச்சபை முகப்புகளிலிருந்து ஒரு தட்டல் தொலைவில் உங்கள் பார்வையாளர்களை வைத்துக்கொள்ளலாம். உங்கள் நிகழ்விலிருந்து எந்த வெளிப்புற இணையதளத்திற்கும் தொடுக்கி கொடுங்கள்.

Image Module படத்தொகுதி

ஓவிய கோவை, புகைப்படங்கள், வசனப்படங்கள் போன்ற எந்த வகை ஆதரவான வரைகலைகளையும் கொண்டு உங்கள் நிகழ்வுகளை உயிரூட்டுங்கள். பங்கேற்பாளர்கள் இலகுவாக உங்கள் நிகழ்வு படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து, அதன் மூலம் உங்கள் செய்தியை அதி விரைவாக பரவ செய்யலாம்.

Announcement Module அறிவிப்பு தொகுதி

திருச்சபை செய்திகள், நாள்காட்டி நிகழ்வுகள், நிரல்கள், வகுப்புகள், தன்னார்வ மற்றும் ஊழிய வாய்ப்புகள் போன்றவற்றை சரியான நேரத்தில் எளிதாக விநியோகியுங்கள்.

Multiple Locations இடங்களும் நேரங்களும்

பல்வேறு நேரங்களில், பல்வேறு இடங்களில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு உட்பட உங்கள் நிகழ்வுகள் எங்கே எப்போது இடம்பெறுகின்றன என்று மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

Duplicate Events நகல் நிகழ்வுகள்

நேரத்தையும், முயற்சியையும் மிச்ச படுத்துங்கள். ஏற்கெனவேயுள்ள நிகழ்வுகளின் பிரதியில் மேம்படுத்தப்பட்ட தகவல் கொண்டு மாற்றி, துரிதமாக புது நிகழ்வுகளை உருவாக்குங்கள்.

Cost Savings செலவு குறைப்பு

200 மில்லியனுக்கும் மேற்பட்ட நிறுவல்கள் கொண்ட மேடையை கொண்டு மக்களை சென்றடைவதால் அச்சிடுவதில் பணத்தை சேமித்து, குறைவான காகிதங்களைப் பயன்படுத்துங்கள்.

piggy-bank-image
ஒரு சராசரியான அமெரிக்க திருச்சபைஆண்டிற்கு 6.5 லட்சத்திற்கு மேல்
அறிக்கைத்தாள்கள் அச்சிடுவதில் செலவிடுகின்றனர். இந்த செலவுகளை குறைக்கவோ
நீக்கவோ நிகழ்வுகள் உதவுகின்றது.

சாட்சிகள்

Bill White

"எங்கள் ஊழியத்தில் YouVersion ஐ செயல்படுத்துவதில் உற்சாகமடைந்தோம். முக்கியமாக நிகழ்வுகள் பகுதியில் அந்த வாரத்தின் போதனை குறிப்புகளையும் கருத்துகளையும் சேர்ப்போம். குறிப்புகளை எளிதாக அணுகக்கூடிய இடத்தில் வைத்து அவற்றை பகிரவும், சேமிக்கவும் எங்கள் மக்களுக்கு பிரயோஜனமாக உள்ளது. அச்சிட்ட நிரல்களை மாற்றம் செய்வதன் மூலம் ஆயிரக்கணக்கான டாலர்களை மற்ற ஊழிய தேவைகளுக்கு திருப்பிவிட்டுள்ளோம்!"

Pastor Bill White
Christ Journey Church

Herbert

"YouVersion நிகழ்வுகள் எங்கள் திருச்சபை குடும்பத்திற்கு ஒரு விலையேறப்பெற்ற வளம். செய்தியின் போது பிரசங்கக்குறிப்புகள் மற்றும் வேத வசனங்களையும் கொண்டு தொடரக்கூடிய வாய்ப்பு வல்லமையான ஈடுபாட்டையும் தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றது."

Pastor Herbert Cooper
People’s Church

Cindy Beall

"எங்களது அனைத்து அமர்வுகளுக்கும் நிகழ்வுகளை உபயோகிப்பதால், எங்கள் பங்கேற்பாளர்கள் பேச்சாளர்களின் குறிப்புகளையும் வேத பகுதிகளையும் கண்ணெதிரே காண வழிவகுக்கிறது, ஆயிரக்கணக்கான பக்கங்களை அச்சிடுவதை நிகழ்வுகள் காப்பாற்றியுள்ளது! நிகழ்வுகளை அமைப்பது மிகவும் எளிது, அதுமட்டுமின்றி, எங்களுக்கு தேவையான சரியான சமயத்தில் எப்போதும் வெளியிடப்படுகிறது."

Cindy Beall
Leading and Loving It
Director of Equip

bible icon

முற்றிலும் புதிய நிகழ்வுகள், முற்றும் இலவசம், பைபிள் பயன்பாட்டில் மட்டுமே.

A revolution in Bible engagement is taking place within our lifetimes. Installed on more than 220 million unique devices so far (and counting), the Bible App is helping people in every country on earth connect more with God’s Word. And now, through Events, we’re happy to offer the reach of that platform to you.

வாருங்கள் தொடங்கலாம்.

பைபிள் பயன்பாட்டில் பகிர்வதற்கான உங்கள் முதல் நிகழ்வை பத்து நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் உருவாக்க தயாராகுங்கள். உங்களுக்கு தேவையானதெல்லாம் ஒரு கணிப்பொறியும் ஒரு இலவச YouVersion கணக்கும் தான்.

ஒரு நிகழ்ச்சியை உருவாக்கவும்