சங்கீதம் 59:16 - Compare All Versions

சங்கீதம் 59:16 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

ஆனால் நானோ, உமது பெலனைக் குறித்துப் பாடுவேன்; காலையிலே உமது உடன்படிக்கையின் அன்பை குறித்துப் பாடுவேன்; ஏனெனில் நீரே எனது கோட்டையும் துன்பகாலங்களில் என் புகலிடமுமாய் இருக்கிறீர்.

சங்கீதம் 59:16 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

நானோ உம்முடைய வல்லமையைப் பாடி, காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர்.

சங்கீதம் 59:16 TAERV (பரிசுத்த பைபிள்)

ஆனால் நான் உம்மைப் பாடல்களால் வாழ்த்தித் துதிப்பேன். ஒவ்வொரு காலையும் உமது அன்பில் நான் களிகூருவேன். ஏனெனில் நீரே உயர்ந்த மலைகளில் எனது பாதுகாப்பாயிருக்கிறீர். தொல்லைகள் வரும்பொழுது நான் உம்மிடம் ஓடி வரலாம்.

சங்கீதம் 59:16 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

நானோ உம்முடைய வல்லமையைப் பாடி, காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர்.