ஆகாய் 1
1
கர்த்தரின் ஆலயம் நிர்மாணிக்கப்பட அழைப்பு
1பெர்சிய பேரரசன் தரியுவின் ஆட்சியின் இரண்டாம் வருடம், ஆறாம் மாதம் முதலாம் நாள், இறைவாக்கினன் ஆகாய் மூலமாக செயல்தியேலின் மகனான யூதாவின் ஆளுநர் செருபாபேலுக்கும், யெகோசாதாக்கின் மகனான தலைமை மதகுரு யோசுவாவுக்கும் கர்த்தருடைய வார்த்தை வந்தது.
2“கர்த்தரின் ஆலயத்தை மறுபடியும் கட்டியெழுப்பும் காலம் இன்னும் வரவில்லை” என இந்த மக்கள்#1:2 இந்த மக்கள் – யூதா மக்கள் சொல்கின்றார்கள் என சேனைகளின் கர்த்தர் கூறுகின்றார்.
3அப்போது இறைவாக்கினன் ஆகாய் மூலம் கர்த்தருடைய வார்த்தை வந்தது. 4“என் ஆலயம் இடிபாடாய்க் கிடக்கும்போது நீங்கள் மாத்திரம் உங்கள் அலங்காரமான வீடுகளில் வாழும் காலமா இது?”
5அதனால் இப்போது சேனைகளின் கர்த்தர் சொல்கின்றதாவது: “உங்கள் வழிகளைக் குறித்து கவனமாய் எண்ணிப் பாருங்கள். 6நீங்கள் அதிகமாய் விதைத்திருந்தாலும், சிறிதளவே அறுவடை செய்தீர்கள்; நீங்கள் சாப்பிடுகிறீர்கள், ஆனால் ஒருபோதும் திருப்தியடைவதில்லை; நீங்கள் பானம் அருந்துகிறீர்கள், ஆனால் உங்கள் தாகம் ஒருபோதும் தீருவதில்லை. ஆடைகளை அணிந்துகொள்கின்றீர்கள், குளிரோ உங்களைவிட்டுப் போவதில்லை. நீங்கள் பணத்தைச் சம்பாதிக்கிறீர்கள், ஆனால் அதை ஓட்டையான பையிலே போடுகின்றீர்கள்.”
7சேனைகளின் கர்த்தர் சொல்கிறதாவது: “உங்கள் வழிகளைக் குறித்துக் கவனமாய் எண்ணிப் பாருங்கள். 8மலைகளில் ஏறிப் போய் மரங்களைக் கொண்டுவந்து எனது வீட்டைக் கட்டியெழுப்புங்கள், அப்போது நான் அதில் மகிழ்ந்து, கௌரவப்படுத்தப்படுவேன்” என்று கர்த்தர் சொல்கின்றார். 9“நீங்கள் எதிர்ப்பார்த்ததோ அதிகமான அறுவடை, ஆனால் இதோ! அது சிறிதளவாயிற்று; நீங்கள் வீட்டுக்குக் கொண்டுவந்த அதையும் நான் ஊதிவிட்டேன். ஏனென்றால் என் வீடு பாழடைந்து கிடக்கும்போது, நீங்கள் உங்கள் வீடுகளைக் குறித்தே அதிக பரபரப்பாய் இருக்கின்றீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்கின்றார். 10அதனால் உங்களாலேயே வானம் பனியைப் பொழியாமலும், நிலம் விளைச்சலைத் தராமலும் போயிற்று. 11நான் வயலின்மீதும், மலைகளின்மீதும், தானியத்தின்மீதும், புதுத் திராட்சைரசத்தின்மீதும், எண்ணெயின்மீதும், பூமியில் விளையும் எல்லாவற்றின்மீதும், மனிதன்மீதும், மந்தைகள்மீதும், உங்கள் கைகளின் உழைப்பின்மீதும் வரட்சியை வருவித்தேன்.”
12அப்போது செயல்தியேலின் மகன் செருபாபேலும், யெகோசாதாக்கின் மகனான யோசுவா என்னும் தலைமை மதகுருவும், மக்களில் எஞ்சியிருந்த#1:12 எஞ்சியிருந்த – பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டு திரும்பிய எஞ்சியிருந்த மக்கள் அனைவரும் தங்கள் இறைவனாகிய கர்த்தரின் குரலுக்கும், தங்கள் இறைவனாகிய கர்த்தர் இறைவாக்கினன் ஆகாயை அனுப்பியதால் அவனுடைய வார்த்தைகளுக்கும் கீழ்ப்படிந்தார்கள். இவ்வாறு மக்கள் கர்த்தரிடம் பயபக்தியாய் இருந்தார்கள்.
13அப்போது கர்த்தரின் தூதுவனாகிய ஆகாய், “நான் உங்களுடன் இருக்கின்றேன் என்று கர்த்தர் அறிவிக்கின்றார்” என்ற கர்த்தரின் செய்தியை மக்களுக்குக் கொடுத்தான். 14இவ்வாறு கர்த்தர் யூதாவின் ஆளுநரான செயல்தியேலின் மகன் செருபாபேலின் ஆவியையும், யெகோசாதாக்கின் மகனும் தலைமை மதகுருவுமாகிய யோசுவாவின் ஆவியையும், எஞ்சியிருந்த மக்கள் அனைவரினது ஆவியையும் தூண்டிவிட்டார். அவர்கள் எல்லோரும் வந்து, தங்கள் இறைவனாகிய சேனைகளின் கர்த்தரின் வீட்டின் வேலையை ஆரம்பித்தார்கள். 15இது ஆறாம் மாதம் இருபத்து நான்காம் நாள் நிகழ்ந்தது.
புதிய ஆலயத்துக்கு வாக்குறுதி செய்யப்பட்ட மகிமை
தரியு அரசனின் ஆட்சியின் இரண்டாம் வருடம்,
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
ஆகாய் 1: TRV
சிறப்புக்கூறு
நகல்
ஒப்பீடு
பகிர்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.