சங்கீத புத்தகம் 27:7-11
சங்கீத புத்தகம் 27:7-11 TAERV
கர்த்தாவே, என் குரலைக் கேட்டு எனக்குப் பதில் தாரும், என்னிடம் தயவாயிரும். கர்த்தாவே, உம்மோடு பேசவிரும்புகிறேன். என் இருதயத்திலிருந்து உம்மிடம் பேசவாஞ்சிக்கிறேன். கர்த்தாவே, உம்மிடம் பேசுவதற்காக உமக்கு முன்பாக வருகிறேன். கர்த்தாவே, என்னிடமிருந்து விலகாதேயும்! உமது ஊழியனாகிய என்னிடம் கோபங்கொண்டு, என்னைவிட்டு விலகாதேயும்! எனக்கு உதவும்! என்னைத் தூரத்தள்ளாதிரும். என்னை விட்டு விடாதிரும்! என் தேவனே, நீரே என் இரட்சகர்! என் தந்தையும் தாயும் என்னை கைவிட்டனர். ஆனால் கர்த்தர் என்னை எடுத்து தமக்குரியவன் ஆக்கினார். கர்த்தாவே, எனக்குப் பகைவருண்டு. எனவே உமது வழிகளை எனக்குப் போதியும். சரியான காரியங்களைச் செய்வதற்கு எனக்குப் போதியும்.





