1
யோவான் எழுதிய சுவிசேஷம் 3:16
பரிசுத்த பைபிள்
TAERV
“ஆம்! தேவன் இவ்வுலகினைப் பெரிதும் நேசித்தார். எனவே தனது ஒரே குமாரனை இதற்குத் தந்தார். தேவன் தன் குமாரனைத் தந்ததால் அவரில் நம்பிக்கை வைக்கிற எவரும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனைப் பெறுவர்.
Сравнить
Изучить யோவான் எழுதிய சுவிசேஷம் 3:16
2
யோவான் எழுதிய சுவிசேஷம் 3:17
தேவன் தன் குமாரனை உலகிற்கு அனுப்பினார். உலகின் குற்றங்களை நியாயம் விசாரிக்க தனது குமாரனை அனுப்பவில்லை. இவ்வுலகம் தேவனுடைய குமாரனால் இரட்சிக்கப்படுவதற்கென்று தேவன் தன் குமாரனை அனுப்பினார்.
Изучить யோவான் எழுதிய சுவிசேஷம் 3:17
3
யோவான் எழுதிய சுவிசேஷம் 3:3
அதற்கு இயேசு, “நான் உனக்கு உண்மையைக் கூறுகிறேன். ஒருவன் மீண்டும் பிறக்கவேண்டும். இல்லாவிட்டால் அவன் தேவனுடைய இராஜ்யத்தில் இடம்பெற முடியாது” என்று கூறினார்.
Изучить யோவான் எழுதிய சுவிசேஷம் 3:3
4
யோவான் எழுதிய சுவிசேஷம் 3:18
தேவகுமாரன் மீது நம்பிக்கை வைக்கிறவர்கள் தண்டிக்கப்படுவதில்லை. ஆனால், அவர் மீது நம்பிக்கைகொள்ளாதவர்கள் ஏற்கெனவே தண்டிக்கப்பட்டுவிட்டார்கள். ஏன்? ஏனென்றால் அவர்களுக்கு தேவனுடைய ஒரே குமாரன் மீது நம்பிக்கை இல்லை.
Изучить யோவான் எழுதிய சுவிசேஷம் 3:18
5
யோவான் எழுதிய சுவிசேஷம் 3:19
இந்த உலகத்துக்கு ஒளி (நன்மை) வந்திருக்கிறது. ஆனால் அந்த ஒளியை மக்கள் விரும்பவில்லை. அவர்கள் இருளை (பாவத்தை) விரும்பினார்கள். ஏனென்றால் அவர்கள் தீய செயல்களைச் செய்துகொண்டிருந்தார்கள். இந்த உண்மையை வைத்தே அவர்கள் நியாயம் விசாரிக்கப்படுகிறார்கள்.
Изучить யோவான் எழுதிய சுவிசேஷம் 3:19
6
யோவான் எழுதிய சுவிசேஷம் 3:30
இயேசு மேலும் பெருமை பெறவேண்டும். எனது முக்கியத்துவம் குறைந்துவிடவேண்டும்.
Изучить யோவான் எழுதிய சுவிசேஷம் 3:30
7
யோவான் எழுதிய சுவிசேஷம் 3:20
தீமைகளைச் செய்கிற ஒவ்வொரு மனிதனும் ஒளியை வெறுக்கிறான். அவன் வெளிச்சத்துக்குள் வரமாட்டான். ஏனென்றால் ஒளி அவன் செய்த தீமைகளை வெளிப்படுத்திக்காட்டும்.
Изучить யோவான் எழுதிய சுவிசேஷம் 3:20
8
யோவான் எழுதிய சுவிசேஷம் 3:36
இந்தக் குமாரனை நம்புகிற எவரும் நித்திய ஜீவனைப் பெறுவர். ஆனால் அவருக்குக் கீழ்ப்படிய மறுக்கிற எவரும் அந்த வாழ்வை ஒருபோதும் பெற முடியாது. தேவனுடைய கோபம் அவர்கள் மேல் இருக்கும்” என்று யோவான் அவர்களுக்குக் கூறினான்.
Изучить யோவான் எழுதிய சுவிசேஷம் 3:36
9
யோவான் எழுதிய சுவிசேஷம் 3:14
“வனாந்தரத்தில் மோசே பாம்பினை உயர்த்திப் பிடித்தான். அவ்வாறே மனிதகுமாரனும் உயர்த்தப்பட வேண்டும்.
Изучить யோவான் எழுதிய சுவிசேஷம் 3:14
10
யோவான் எழுதிய சுவிசேஷம் 3:35
பிதாவானவர் தன் குமாரனை நேசிக்கிறார். அவர் தன் குமாரனுக்கு அனைத்தின் மேலும் அதிகாரம் கொடுத்திருக்கிறார்.
Изучить யோவான் எழுதிய சுவிசேஷம் 3:35
Главная
Библия
Планы
Видео