யோவான் 21:15-17
யோவான் 21:15-17 TRV
அவர்கள் உணவருந்தி முடித்த பின்பு இயேசு, சீமோன் பேதுருவிடம், “யோவானின் மகனான சீமோனே, இவர்களைவிட நீ என்னில் அதிக அன்பாயிருக்கின்றாயா?” என்று கேட்டார். அதற்கு அவன், “ஆம் ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன் என்பது உமக்குத் தெரியும்” என்றான். அப்போது இயேசு, “என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக” என்றார். இயேசு இரண்டாவது முறை அவனிடம், “யோவானின் மகனான சீமோனே, நீ என்னில் அன்பாயிருக்கின்றாயா?” என்று கேட்டார். அதற்கு அவன், “ஆம் ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன் என்று உமக்குத் தெரியும்” என்றான். அப்போது இயேசு, “என் செம்மறியாடுகளை மேய்ப்பாயாக” என்றார். மூன்றாவது தடவை அவர் அவனிடம், “யோவானின் மகனான சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா?” என்று கேட்டார். மூன்றாவது தடவையும், “நீ என்னை நேசிக்கிறாயா?” என்று இயேசு கேட்டதனால் பேதுரு துக்கமடைந்து, அவன் அவரிடம், “ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கின்றீர்; நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் அறிந்திருக்கின்றீர்” என்றான். இயேசு அவனிடம், “என் செம்மறியாடுகளைப் பராமரிப்பாயாக.



![[Unboxing Psalm 23: Treasures for Every Believer] Paths of Righteousness யோவான் 21:15-17 இலகு தமிழ் மொழிபெயர்ப்பு](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F35790%2F1440x810.jpg&w=3840&q=75)

