1
யோவான் 10:10
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
திருடனோ திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகின்றான்; நானோ, அவர்கள் வாழ்வடையும்படியாகவும், அதை அவர்கள் நிறைவாய் பெற்றுக்கொள்ளும்படியாகவும் வந்தேன்.
Compare
யோவான் 10:10ਪੜਚੋਲ ਕਰੋ
2
யோவான் 10:11
“நானே நல்ல மேய்ப்பன்; நல்ல மேய்ப்பன் செம்மறியாடுகளுக்காகத் தன் உயிரைக் கொடுக்கின்றான்.
யோவான் 10:11ਪੜਚੋਲ ਕਰੋ
3
யோவான் 10:27
எனது செம்மறியாடுகள் என் குரலைக் கேட்கின்றன. நான் அவற்றை அறிந்திருக்கின்றேன். அவை என்னைப் பின்பற்றுகின்றன.
யோவான் 10:27ਪੜਚੋਲ ਕਰੋ
4
யோவான் 10:28
நான் அவைகளுக்கு நித்திய வாழ்வைக் கொடுக்கின்றேன். அவை ஒருபோதும் கெட்டழிந்து போவதில்லை. ஒருவராலும் அவற்றை என்னுடைய கைகளிலிருந்து பறித்தெடுக்கவும் முடியாது.
யோவான் 10:28ਪੜਚੋਲ ਕਰੋ
5
யோவான் 10:9
நானே வாயில்; என் வழியாய் உள்ளே போகின்றவன் எவனோ, அவன் இரட்சிக்கப்படுவான். அவன் சுதந்திரமாய் உள்ளே வந்தும் வெளியே சென்றும் தனக்குரிய மேய்ச்சலைப் பெற்றுக்கொள்வான்.
யோவான் 10:9ਪੜਚੋਲ ਕਰੋ
6
யோவான் 10:14
“நானே நல்ல மேய்ப்பன்; நான் என் செம்மறியாடுகளை அறிந்திருக்கின்றேன். என்னுடைய செம்மறியாடுகள் என்னை அறிந்திருக்கின்றன.
யோவான் 10:14ਪੜਚੋਲ ਕਰੋ
7
யோவான் 10:29-30
அவற்றை எனக்குக் கொடுத்த என்னுடைய பிதா, எல்லோரைப் பார்க்கிலும் மிகவும் பெரியவர்; அவற்றை என் பிதாவின் கையிலிருந்து ஒருவராலும் பறித்துக்கொள்ள முடியாது. நானும் பிதாவும் ஒன்று” என்றார்.
யோவான் 10:29-30ਪੜਚੋਲ ਕਰੋ
8
யோவான் 10:15
பிதா என்னை அறிந்திருப்பது போல நானும் பிதாவை அறிந்திருக்கின்றேன், நான் செம்மறியாடுகளுக்காக என் உயிரையும் கொடுக்கின்றேன்.
யோவான் 10:15ਪੜਚੋਲ ਕਰੋ
9
யோவான் 10:18
என் உயிரை ஒருவரும் என்னிடமிருந்து பறித்துக்கொள்வதில்லை. என் சுயவிருப்பத்தின்படியே நான் என் உயிரைக் கொடுக்கின்றேன். அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு; அதைத் திரும்பப் பெற்றுக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்த கட்டளையை நான் என் பிதாவிடமிருந்து பெற்றுக்கொண்டேன்” என்றார்.
யோவான் 10:18ਪੜਚੋਲ ਕਰੋ
10
யோவான் 10:7
எனவே இயேசு மீண்டும் அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன், செம்மறியாடுகளுக்கு வாயில் நானே.
யோவான் 10:7ਪੜਚੋਲ ਕਰੋ
11
யோவான் 10:12
கூலிக்காக மேய்ப்பவனோ செம்மறியாடுகளின் உரிமையுள்ள மேய்ப்பன் அல்ல. எனவே அவன் ஓநாய் வருகின்றதைக் காண்கின்றபோது, செம்மறியாடுகளை விட்டுவிட்டு ஓடிப் போகின்றான். அப்போது ஓநாயானது மந்தையைத் தாக்கி, அதைச் சிதறடிக்கிறது.
யோவான் 10:12ਪੜਚੋਲ ਕਰੋ
12
யோவான் 10:1
மேலும் இயேசு, “நான் உங்களுக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன், செம்மறியாட்டுத் தொழுவத்திற்குள் வாயில் வழியாய் உள்ளே போகாமல், வேறு வழியாய் ஏறி உள்ளே வருகின்றவன் திருடனும் கொள்ளைக்காரனுமாய் இருக்கின்றான்.
யோவான் 10:1ਪੜਚੋਲ ਕਰੋ
Home
ਬਾਈਬਲ
Plans
ਵੀਡੀਓ