1
ஆதியாகமம் 3:6
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
அப்போது அந்தப் பெண், அந்த மரத்தின் பழம் உண்பதற்கு நல்லதாகவும், பார்வைக்குக் கவர்ச்சியாகவும் இருந்ததுடன், அது அறிவைப் பெறுவதற்கு விரும்பத்தக்கதாகவும் இருக்கக் கண்டு, அவள் அதைப் பறித்து உண்டாள். தன்னுடன் இருந்த கணவனுக்கும் கொடுத்தாள், அவனும் உண்டான்.
Compare
ஆதியாகமம் 3:6ਪੜਚੋਲ ਕਰੋ
2
ஆதியாகமம் 3:1
இறைவனாகிய கர்த்தர் உருவாக்கியிருந்த காட்டுமிருகங்கள் எல்லாவற்றையும்விட, பாம்பு அதிக தந்திரமுள்ளதாய் இருந்தது. பாம்பு அப்பெண்ணிடம், “ ‘நீங்கள் சோலையில் உள்ள மரங்களில், ஒரு மரத்தின் பழத்தைக்கூட உண்ண வேண்டாம்’ என்று இறைவன் உங்களுக்குச் சொன்னார் என்பது உண்மையா?” எனக் கேட்டது.
ஆதியாகமம் 3:1ਪੜਚੋਲ ਕਰੋ
3
ஆதியாகமம் 3:15
உனக்கும் பெண்ணுக்கும் இடையில் நான் பகையை ஏற்படுத்துவேன், உன்னுடைய சந்ததிக்கும் அவளுடைய சந்ததிக்கும் இடையிலும் நான் பகையை ஏற்படுத்துவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவரது குதிகாலைத் தாக்குவாய்” என்றார்.
ஆதியாகமம் 3:15ਪੜਚੋਲ ਕਰੋ
4
ஆதியாகமம் 3:16
அதன் பின்னர் அவர் பெண்ணிடம், “உனது மகப்பேற்றினை அதிக வேதனை உடையதாக்குவேன்; நீ வேதனையோடு பாடுபட்டு குழந்தைகளைப் பெற்றெடுப்பாய்; நீ உன் கணவன்மீது ஆசை கொண்டிருப்பாய், அவனோ உன்னை ஆட்சி செய்வான்” என்றார்.
ஆதியாகமம் 3:16ਪੜਚੋਲ ਕਰੋ
5
ஆதியாகமம் 3:19
நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால், நீ மீண்டும் அங்கு திரும்பும்வரை, நெற்றி வியர்வை சிந்துமளவுக்கு உழைத்தே உன் உணவைப் பெற்று உண்பாய். நீ மண் துகள்களால் ஆனவன்; நீ மீண்டும் மண் துகள்களாக மாறுவாய்” என்றார்.
ஆதியாகமம் 3:19ਪੜਚੋਲ ਕਰੋ
6
ஆதியாகமம் 3:17
அவர் ஆதாமிடம், “ ‘இந்த மரத்திலிருந்து உண்ண வேண்டாம்’ என்று நான் உனக்குக் கட்டளையிட்டு இருக்கையில், நீ உன் மனைவியின் குரலுக்கு செவிசாய்த்து அந்த மரத்திலிருந்து உண்டதனால், “உன் பொருட்டு மண்ணானது சபிக்கப்பட்டிருக்கும்; உன் வாழ்நாளெல்லாம் நீ வேதனையோடு பாடுபட்டு உழைத்தே மண்ணின் பலனை உண்பாய்.
ஆதியாகமம் 3:17ਪੜਚੋਲ ਕਰੋ
7
ஆதியாகமம் 3:11
அதற்கு இறைவனாகிய கர்த்தர், “நீ நிர்வாணமாக இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது யார்? உண்ண வேண்டாமென்று நான் உனக்குக் கட்டளையிட்ட மரத்திலிருந்து நீ உண்டாயோ?” என்று கேட்டார்.
ஆதியாகமம் 3:11ਪੜਚੋਲ ਕਰੋ
8
ஆதியாகமம் 3:24
அவர் மனிதனை வெளியே துரத்திவிட்ட பின்னர், வாழ்வளிக்கும் மரத்துக்குப் போகும் வழியைக் காவல் காக்கும்படி, ஏதேன் சோலையின் கிழக்குப் பக்கமாக கேருபீன்களையும், சுற்றிச் சுழலும் சுடரொளி வாளையும் வைத்தார்.
ஆதியாகமம் 3:24ਪੜਚੋਲ ਕਰੋ
9
ஆதியாகமம் 3:20
வாழ்வோருக்கெல்லாம் தாயாவாள் என்பதால், ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் எனப் பெயர் சூட்டினான்.
ஆதியாகமம் 3:20ਪੜਚੋਲ ਕਰੋ
Home
ਬਾਈਬਲ
Plans
ਵੀਡੀਓ