யாத்திராகமம் 3:7-8

யாத்திராகமம் 3:7-8 TRV

அப்போது கர்த்தர், “எகிப்தில் என் மக்களின் துயரத்தை நான் உண்மையாகக் கண்டு, அவர்களுடைய அடிமைகளை நடத்தும் அதிகாரிகளின் காரணமாக அம்மக்கள் எழுப்பும் அழுகுரலைக் கேட்டேன். அவர்கள் துன்பப்படுவதைக் குறித்து நான் கரிசனையாயிருக்கிறேன். அதனால் அவர்களை எகிப்தியரின் கையிலிருந்து விடுவித்து, அந்த நாட்டிலிருந்து அவர்களை வெளியேற்றி, கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகியோர் குடியிருக்கும் பாலும் தேனும் வழிந்தோடுகின்ற, நலமும் விசாலமுமான நாட்டுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்க இறங்கி வந்தேன்.