எண் 26
26
அத்தியாயம் 26
இரண்டாவது கணக்கெடுப்பு
1அந்த வாதை தீர்ந்தபின்பு, யெகோவா மோசேயையும் ஆரோனின் மகனும் ஆசாரியனுமாகிய எலெயாசாரையும் நோக்கி: 2“இஸ்ரவேல் மக்களின் எல்லா சபையாரையும் அவர்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படி இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட இஸ்ரவேலிலே யுத்தத்திற்குப் புறப்படக்கூடியவர்கள் எல்லோரையும் எண்ணுங்கள்” என்றார். 3அப்பொழுது மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் எரிகோவின் அருகே இருக்கும் யோர்தானுக்கு அருகிலே மோவாபின் சமவெளிகளிலே அவர்களோடு பேசி: 4“யெகோவா மோசேக்கும் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் மக்களுக்கும் கட்டளையிட்டிருக்கிறபடியே, இருபது வயது முதற்கொண்டிருக்கிறவர்களை எண்ணுங்கள்” என்றார்கள். 5ரூபன் இஸ்ரவேலின் மூத்த மகன்: ரூபனுடைய மகன்கள், ஆனோக்கியர்களின் குடும்பத்திற்குத் தகப்பனான ஆனோக்கும், பல்லூவியர்கள் குடும்பத்திற்குத் தகப்பனான பல்லூவும், 6எஸ்ரோனியர்களின் குடும்பத்திற்குத் தகப்பனான எஸ்ரோனும், கர்மீயர்களின் குடும்பத்திற்குத் தகப்பனான கர்மீயுமே. 7இவைகளே ரூபனியர்களின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் 43,730 பேர். 8பல்லூவின் மகன் எலியாப். 9எலியாபின் மகன்கள் நேமுவேல், தாத்தான், அபிராம் என்பவர்கள்; இந்தத் தாத்தான் அபிராம் என்பவர்களே சபையில் பெயர்பெற்றவர்களாக இருந்து, யெகோவாவுக்கு எதிராகப் போராட்டம்செய்து, கோராகின் கூட்டாளிகளாகி, மோசேக்கும், ஆரோனுக்கும் எதிராக விவாதம்செய்தவர்கள். 10பூமி தன்னுடைய வாயைத் திறந்து, அவர்களையும் கோராகையும் விழுங்கினதினாலும், அக்கினி 250 பேரை எரித்ததினாலும், அந்தக் கூட்டத்தார் செத்து, ஒரு அடையாளமானார்கள். 11கோராகின் மகன்களோ சாகவில்லை. 12சிமியோனுடைய மகன்களின் குடும்பங்களாவன: நேமுவேலின் சந்ததியான நேமுவேலர்களின் குடும்பமும், யாமினியின் சந்ததியான, யாமினியர்களின் குடும்பமும், யாகீனின் சந்ததியான யாகீனியர்களின் குடும்பமும், 13சேராகின் சந்ததியான சேராகியர்களின் குடும்பமும், சவுலின் சந்ததியான சவுலியர்களின் குடும்பமுமே. 14இவைகளே சிமியோனியர்களின் குடும்பங்கள்; அவர்கள் 22,200 பேர். 15காத்துடைய மகன்களின் குடும்பங்களாவன: சிப்போனின் சந்ததியான சிப்போனியர்களின் குடும்பமும், அகியின் சந்ததியான ஆகியர்களின் குடும்பமும், சூனியின் சந்ததியான சூனியர்களின் குடும்பமும், 16ஒஸ்னியின் சந்ததியான ஒஸ்னியர்களின் குடும்பமும், ஏரியின் சந்ததியான ஏரியர்களின் குடும்பமும், 17ஆரோதின் சந்ததியான ஆரோதியர்களின் குடும்பமும், அரேலியின் சந்ததியான அரேலியர்களின் குடும்பமுமே. 18இவைகளே காத் சந்ததியின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் 40,500 பேர். 19யூதாவின் மகன்கள் ஏர், ஓனான் என்பவர்கள்; ஏரும், ஓனானும் கானான்தேசத்தில் செத்தார்கள். 20யூதாவுடைய மற்ற மகன்களின் குடும்பங்களாவன: சேலாவின் சந்ததியான சேலாவியர்களின் குடும்பமும், பாரேசின் சந்ததியான பாரேசியர்களின் குடும்பமும், சேராவின் சந்ததியான சேராகியர்களின் குடும்பமுமே. 21பாரேசுடைய மகன்களின் குடும்பங்களாவன: எஸ்ரோனின் சந்ததியான எஸ்ரோனியர்களின் குடும்பமும், ஆமூலின் சந்ததியான ஆமூலியர்களின் குடும்பமுமே. 22இவைகளே யூதாவின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் 76,500 பேர். 23இசக்காருடைய மகன்களின் குடும்பங்களாவன: தோலாவின் சந்ததியான தோலாவியர்களின் குடும்பமும், பூவாவின் சந்ததியான பூவாவியர்களின் குடும்பமும், 24யாசூபின் சந்ததியான யாசூபியர்களின் குடும்பமும், சிம்ரோனின் சந்ததியான சிம்ரோனியர்களின் குடும்பமுமே. 25இவைகளே இசக்காரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் அறுபத்து 64,300 பேர். 26செபுலோனுடைய மகன்களின் குடும்பங்களாவன: சேரேத்தின் சந்ததியான சேரேத்தியர்களின் குடும்பமும், ஏலோனின் சந்ததியான ஏலோனியர்களின் குடும்பமும், யாலேயேலின் சந்ததியான யாலேயேலியர்களின் குடும்பமுமே. 27இவைகளே செபுலோனியர்களின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் 60,500 பேர். 28யோசேப்புடைய மகனான மனாசே எப்பிராயீம் என்பவர்களின் குடும்பங்களாவன: 29மனாசேயினுடைய மகன்களின் குடும்பங்கள்; மாகீரின் சந்ததியான மாகீரியர்களின் குடும்பமும், மாகீர் பெற்ற கீலேயாத்தின் சந்ததியான கிலெயாதியர்களின் குடும்பமும், 30கீலேயாத் பெற்ற ஈயேசேர்களின் சந்ததியான ஈயேசேரியர்களின் குடும்பமும், ஏலேக்கின் சந்ததியான ஏலேக்கியர்களின் குடும்பமும், 31அஸ்ரியேலின் சந்ததியான அஸ்ரியேலர்களின் குடும்பமும், சேகேமின் சந்ததியான சேகேமியர்களின் குடும்பமும், 32செமீதாவின் சந்ததியான செமீதாவியர்களின் குடும்பமும், எப்பேரின் சந்ததியான எப்பேரியர்களின் குடும்பமுமே. 33எப்பேரின் மகனான செலொப்பியாத்திற்கு மகன்கள் இல்லாமல், மகள்கள் மட்டும் இருந்தார்கள்; இவர்கள் பெயர்கள் மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பவைகள். 34இவைகளே மனாசேயின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் 52,700 பேர். 35எப்பிராயீமுடைய மகன்களின் குடும்பங்களாவன: சுத்தெலாகின் சந்ததியான சுத்தெலாகியர்களின் குடும்பமும், பெகேரின் சந்ததியான பெகேரியர்களின் குடும்பமும், தாகானின் சந்ததியான தாகானியர்களின் குடும்பமும், 36சுத்தெலாக் பெற்ற ஏரானின் சந்ததியான ஏரானியர்களின் குடும்பமுமே. 37இவைகளே எப்பிராயீம் சந்ததியின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் 32,500 பேர்; இவர்களே யோசேப்பு சந்ததியின் குடும்பங்கள். 38பென்யமீனுடைய மகன்களின் குடும்பங்களாவன: பேலாவின் சந்ததியான பேலாவியர்களின் குடும்பமும், அஸ்பேலின் சந்ததியான அஸ்பேலியர்களின் குடும்பமும், அகிராமின் சந்ததியான அகிராமியர்களின் குடும்பமும், 39சுப்பாமின் சந்ததியான சுப்பாமியர்களின் குடும்பமும், உப்பாமின் சந்ததியான உப்பாமியர்களின் குடும்பமும், 40பேலா பெற்ற ஆரேதின் சந்ததியான ஆரேதியர்களின் குடும்பமும், நாகமானின் சந்ததியான நாகமானியர்களின் குடும்பமுமே. 41இவைகளே பென்யமீன் சந்ததியின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் 45,600 பேர். 42தாணுடைய மகன்களின் குடும்பங்களாவன: சூகாமின் சந்ததியான சூகாமியரின் குடும்பமே; இவைகள் தாணின் குடும்பம். 43சூகாமியர்களின் வம்சங்களில் எண்ணப்பட்டவர்கள் எல்லோரும் 64,400 பேர். 44ஆசேருடைய மகன்களின் குடும்பங்களாவன: இம்னாவின் சந்ததியான இம்னாவியர்களின் குடும்பமும், இஸ்வியின் சந்ததியான இஸ்வியர்களின் குடும்பமும், பெரீயாவின் சந்ததியான பெரீயாவியர்களின் குடும்பமும், 45பெரீயா பெற்ற ஏபேரின் சந்ததியான ஏபேரியர்களின் குடும்பமும், மல்கியேலின் சந்ததியான மல்கியேலியர்களின் குடும்பமுமே. 46ஆசேருடைய மகளின் பெயர் சேராள். 47இவைகளே ஆசேர் சந்ததியின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் 53,400 பேர். 48நப்தலியினுடைய மகன்களின் குடும்பங்களாவன: யாத்சியேலின் சந்ததியான யாத்சியேலியர்களின் குடும்பமும், கூனியின் சந்ததியான கூனியர்களின் குடும்பமும், 49எத்செரின் சந்ததியான எத்செரியர்களின் குடும்பமும், சில்லேமின் சந்ததியான சில்லேமியர்களின் குடும்பமுமே. 50இவைகளே நப்தலியின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் 45,400 பேர். 51இஸ்ரவேல் மக்களில் எண்ணப்பட்டவர்கள் 6,01,730 பேராக இருந்தார்கள். 52யெகோவா மோசேயை நோக்கி: 53“இவர்களுடைய பேர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி தேசம் இவர்களுக்குச் சுதந்தரமாகப் பங்கிடப்படவேண்டும். 54அநேகம்பேருக்கு அதிக சுதந்தரமும் கொஞ்சம்பேருக்குக் கொஞ்ச சுதந்தரமும் கொடுக்கவேண்டும்; அவர்களில் எண்ணப்பட்ட எண்ணிக்கைக்குத் தகுந்தபடி அவரவர்களுக்குச் சுதந்தரம் கொடுக்கப்படவேண்டும். 55ஆனாலும் சீட்டுப்போட்டு, தேசத்தைப் பங்கிடவேண்டும்; தங்கள் பிதாக்களுடைய கோத்திரங்களுக்குரிய பெயர்களின்படியே சுதந்தரித்துக்கொள்ளவேண்டும். 56அநேகம்பேரோ கொஞ்சம்பேர்களோ சீட்டு விழுந்தபடியே அவரவர்களுடைய சுதந்தரங்கள் பங்கிடப்படவேண்டும்” என்றார். 57எண்ணப்பட்ட லேவியர்களின் குடும்பங்களாவன: கெர்சோனின் சந்ததியான கெர்சோனியர்களின் குடும்பமும், கோகாத்தின் சந்ததியான கோகாத்தியர்களின் குடும்பமும், மெராரியின் சந்ததியான மெராரியர்களின் குடும்பமும்; 58லேவியின் மற்றக் குடும்பங்களாகிய லிப்னீயர்களின் குடும்பமும், எப்ரோனியர்களின் குடும்பமும், மகலியர்களின் குடும்பமும், மூசியர்களின் குடும்பமும், கோராகியர்களின் குடும்பமுமே. கோகாத் அம்ராமைப் பெற்றான். 59அம்ராமுடைய மனைவிக்கு யோகெபேத் என்று பெயர்; அவள் எகிப்திலே லேவிக்குப் பிறந்த மகள்; அவள் அம்ராமுக்கு ஆரோனையும் மோசேயையும் அவர்கள் சகோதரியான மிரியாமையும் பெற்றாள். 60ஆரோனுக்கு நாதாபும் அபியூவும் எலெயாசாரும் இத்தாமாரும் பிறந்தார்கள். 61நாதாபும் அபியூவும் யெகோவாவுடைய சந்நிதியில் அந்நிய அக்கினியைக் கொண்டுவந்தபோது, செத்துப்போனார்கள். 62அவர்களில் ஒரு மாத ஆண்பிள்ளையிலிருந்து எண்ணப்பட்டவர்கள் 23,000 பேர்; இஸ்ரவேல் சந்ததியின் நடுவே அவர்களுக்குச் சுதந்தரம் கொடுக்கப்படாதபடியினால், அவர்கள் இஸ்ரவேல் மக்களின் எண்ணிக்கைக்கு உட்படவில்லை. 63மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் எரிகோவின் அருகிலிருக்கும் யோர்தானுக்கு அருகிலே மோவாபின் சமனான வெளிகளில் இஸ்ரவேல் மக்களை எண்ணுகிறபோது இருந்தவர்கள் இவர்களே. 64முன்பு மோசேயும் ஆசாரியனாகிய ஆரோனும் சீனாய் வனாந்திரத்தில் இஸ்ரவேல் சந்ததியை எண்ணும்போது இருந்தவர்களில் ஒருவரும் இவர்களுக்குள் இல்லை. 65வனாந்திரத்தில் நிச்சயமாக சாவார்கள் என்று யெகோவா அவர்களைக் குறித்துச்சொல்லியிருந்தார்; எப்புன்னேயின் மகனாகிய காலேபும் நூனின் மகனாகிய யோசுவாவும் தவிர, வேறொருவரும் அவர்களில் மீதியாக இருக்கவில்லை.
Nke Ahọpụtara Ugbu A:
எண் 26: IRVTam
Mee ka ọ bụrụ isi
Kesaa
Lee anya n'etiti ihe abụọ
Mapịa
Ịchọrọ ka echekwaara gị ihe ndị gasị ị mere ka ha pụta ìhè ná ngwaọrụ gị niile? Debanye aha gị ma ọ bụ mee mbanye
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.