لۆگۆی ئەپی پەرتووکی پیرۆز
ئایکۆنی گەڕان

சங் 129

129
சங்கீதம் 129
ஆரோகண பாடல்.
1என்னுடைய சிறுவயது முதற்கொண்டு
அநேகமுறை என்னை நெருக்கினார்கள்.
2என்னுடைய சிறுவயது முதற்கொண்டு அநேகமுறை என்னை நெருக்கியும்,
என்னை மேற்கொள்ளாமற் போனார்கள்.
3உழுகிறவர்கள் என்னுடைய முதுகின்மேல் உழுது,
தங்களுடைய வரப்புகளை நீளமாக்கினார்கள்.
4யெகோவாவோ நீதியுள்ளவர்;
துன்மார்க்கர்களுடைய கயிறுகளை அவர் அறுத்தார் என்று,
இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.
5சீயோனைப் பகைக்கிற அனைவரும் வெட்கப்பட்டு பின்னிட்டுத் திரும்புவார்கள்.
6வீட்டின்மேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்கள்;
அது வளரும்முன்பு உலர்ந்துபோகும்.
7அறுக்கிறவன் அதினால் தன்னுடைய கையையும்,
அரிகளைக் கட்டுகிறவன் தன்னுடைய மடியையும் நிரப்புவதில்லை.
8யெகோவாவுடைய ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டாகட்டும்;
யெகோவாவின் பெயரினால் உங்களை ஆசீர்வதிக்கிறோம்
என்று வழிப்போக்கர்கள் சொல்வதுமில்லை.

دیاریکراوەکانی ئێستا:

சங் 129: IRVTam

بەرچاوکردن

لەبەرگرتنەوە

بەراوردکردن

هاوبەشی بکە

None

دەتەوێت هایلایتەکانت بپارێزرێت لەناو ئامێرەکانتدا> ? داخڵ ببە