لۆگۆی ئەپی پەرتووکی پیرۆز
ئایکۆنی گەڕان

சங் 124

124
சங்கீதம் 124
தாவீதின் ஆரோகண பாடல்.
1மனிதர்கள் நமக்கு விரோதமாக எழும்பினபோது,
யெகோவா நமது பக்கத்தில் இல்லாவிட்டால்,
2யெகோவா தாமே நமது பக்கத்தில் இல்லாவிட்டால்,
3அவர்களுடைய கோபம் நம்மேல் எரியும்போது,
நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள்.
4அப்பொழுது தண்ணீர்கள் நம்மேல் பாய்ந்து,
வெள்ளங்கள் நமது ஆத்துமாவின்மேல் பெருகி,
5கொந்தளிக்கும் தண்ணீர்கள் நமது ஆத்துமாவின்மேல் புரண்டுபோயிருக்கும்
என்று இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.
6நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடுக்காமல்
இருக்கிற யெகோவாவுக்கு நன்றி.
7வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல
நம்முடைய ஆத்துமா தப்பினது,
கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம்.
8நம்முடைய உதவி வானத்தையும் பூமியையும் உண்டாக்கின
யெகோவாவுடைய பெயரில் உள்ளது.

دیاریکراوەکانی ئێستا:

சங் 124: IRVTam

بەرچاوکردن

لەبەرگرتنەوە

بەراوردکردن

هاوبەشی بکە

None

دەتەوێت هایلایتەکانت بپارێزرێت لەناو ئامێرەکانتدا> ? داخڵ ببە