لۆگۆی ئەپی پەرتووکی پیرۆز
ئایکۆنی گەڕان

சங் 122

122
சங்கீதம் 122
தாவீதின் ஆரோகண பாடல்.
1யெகோவாவுடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள்
என்று என் நண்பர்கள் எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தேன்.
2எருசலேமே, உன்னுடைய வாசல்களில் எங்களுடைய கால்கள் நிற்கிறது.
3எருசலேம் கச்சிதமான நகரமாகக் கட்டப்பட்டிருக்கிறது.
4அங்கே இஸ்ரவேலுக்குச் சாட்சியாகக்
யெகோவாவுடைய மக்களாகிய கோத்திரங்கள் யெகோவாவின் பெயரைப் போற்றுவதற்குப் போகும்.
5அங்கே தாவீதின் வீட்டாருடைய சிங்காசனங்களாகிய
நியாயாசனங்கள் வைக்கப்பட்டிருக்கிறது.
6எருசலேமின் சமாதானத்திற்காக வேண்டிக்கொள்ளுங்கள்;
உன்னை நேசிக்கிறவர்கள் செழித்திருக்கட்டும்.
7உன்னுடைய மதில்களுக்குள்ளே சமாதானமும்,
உன்னுடைய அரண்மனைகளுக்குள்ளே செழிப்பும் இருக்கும்.
8என்னுடைய சகோதரர்களுக்காகவும் என்னுடைய நண்பர்களுக்காகவும்,
உன்னில் சமாதானம் இருக்கட்டும் என்பேன்.
9எங்களுடைய தேவனாகிய யெகோவாவின் ஆலயத்திற்காக
உனக்கு நன்மையுண்டாகத் தேடுவேன்.

دیاریکراوەکانی ئێستا:

சங் 122: IRVTam

بەرچاوکردن

لەبەرگرتنەوە

بەراوردکردن

هاوبەشی بکە

None

دەتەوێت هایلایتەکانت بپارێزرێت لەناو ئامێرەکانتدا> ? داخڵ ببە