لۆگۆی ئەپی پەرتووکی پیرۆز
ئایکۆنی گەڕان

பிரச 11

11
அத்தியாயம் 11
தண்ணீரின்மேல் ஆகாரம்
1உன்னுடைய ஆகாரத்தைத் தண்ணீர்கள்#11:1 கடல் மார்க்கமாக மூலமாக அனுப்பு#11:1 தயவுள்ளவனாயிரு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய். 2ஏழுபேருக்கும் எட்டுபேருக்கும் பங்கிட்டுக்கொடு; பூமியின்மேல் என்ன ஆபத்து நேரிடுமோ உனக்குத் தெரியாது. 3மேகங்கள் நிறைந்திருந்தால் மழையைப் பூமியின்மேல் பொழியும்; மரமானது தெற்கே விழுந்தாலும் வடக்கே விழுந்தாலும், விழுந்த இடத்திலேயே மரம் கிடக்கும். 4காற்றைக் கவனிக்கிறவன் விதைக்கமாட்டான்; மேகங்களைக் கவனிக்கிறவன் அறுக்கமாட்டான். 5ஆவியின்#11:5 காற்று வழி இன்னதென்றும், கர்ப்பவதியின் வயிற்றில் எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்றும் நீ அறியாமல் இருக்கிறதுபோலவே, எல்லாவற்றையும் செய்கிற தேவனுடைய செயல்களையும் நீ அறிந்துகொள்வதில்லை. 6காலையிலே உன்னுடைய விதையை விதை; மாலையிலே உன்னுடைய கையை நெகிழவிடாதே; அதுவோ, இதுவோ, எது வாய்க்குமோ என்றும், இரண்டும் சரியாகப் பயன்படுமோ என்றும் நீ அறியமாட்டாய்.
வாலிபத்திலே உன்னுடைய சுபாவத்தை நினை
7வெளிச்சம் இன்பமும், சூரியனைக் காண்பது கண்களுக்கு விருப்பமாகவும் இருக்கும். 8மனிதன் அநேக வருடங்கள் வாழ்ந்து, அவைகளிலெல்லாம் மகிழ்ச்சியாக இருந்தாலும், அவனுடைய இருளின் நாட்களையும் நினைக்கவேண்டும்; அவைகள் அநேகமாக இருக்கும்; வந்து நடப்பதெல்லாம் மாயையே. 9வாலிபனே! உன்னுடைய இளமையிலே சந்தோஷப்படு, உன்னுடைய வாலிப நாட்களிலே உன்னுடைய இருதயம் உன்னை மகிழ்ச்சியாக்கட்டும்; உன்னுடைய நெஞ்சின் வழிகளிலும், உன்னுடைய கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றிக்காகவும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறிந்துகொள். 10நீ உன்னுடைய இருதயத்திலிருந்து கோபத்தையும், உன்னுடைய சரீரத்திலிருந்து தீங்கையும் நீக்கிப்போடு; இளவயதும் வாலிபமும் மாயையே.

دیاریکراوەکانی ئێستا:

பிரச 11: IRVTam

بەرچاوکردن

لەبەرگرتنەوە

بەراوردکردن

هاوبەشی بکە

None

دەتەوێت هایلایتەکانت بپارێزرێت لەناو ئامێرەکانتدا> ? داخڵ ببە