ஓசியா 3
3
ஓசியா தன் மனைவியுடன் மீண்டும் சேர்தல்
1பின்பு கர்த்தர் என்னிடம், “உன் மனைவி வேறொருவனால் அன்பு செலுத்தப்பட்டவளாகவும், ஒரு விலைமாதுவாகவும் இருந்தாலும், நீ உன் மனைவியிடம் மீண்டும் போய், அவளிடத்தில் அன்பு செலுத்து. வேறு தெய்வங்களின் பக்கம் திரும்பி, புனிதமான திராட்சைப்பழ அடைகளை விரும்புகிற இஸ்ரயேல் மக்களில் கர்த்தர் அன்பாயிருக்கின்றது போல, நீயும் அவளில் அன்பாயிரு” என்றார்.
2எனவே நான் அவளை எனக்காக பதினைந்து வெள்ளிக்காசுகளுக்கும்#3:2 பதினைந்து வெள்ளிக்காசுகளுக்கும் – சுமார் 170 கிராம் வெள்ளி, ஒரு ஓமரும் ஒரு லெதெக்குமான#3:2 ஒரு ஓமரும் ஒரு லெதெக்குமான – 430 ராத்தல் அல்லது 195 கிலோ கிராம் வாற்கோதுமைக்கும் வாங்கினேன். 3பின்பு நான் அவளிடம், “அநேக நாட்களுக்கு நீ என்னுடனே வாழ வேண்டும்; நீ விலைமாதுவாய் இராதே, நீ ஒருவரோடும் பாலுறவு கொள்ளாதே; நான் உனக்காகக் காத்திருப்பேன், நான் உன்னுடன் வாழ்வேன்” என்றேன்.
4ஏனெனில் இஸ்ரயேலர் அநேக நாட்கள் அரசனோ அல்லது தலைவனோ இல்லாமலும், பலியோ அல்லது புனிதக் கல் தூணோ இல்லாமலும், ஏபோத்தோ அல்லது விக்கிரகங்களோ#3:4 விக்கிரகங்களோ அல்லது தேராபீமோ இது ஒருவரது எதிர்காலத்தை கணிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட குலதெய்வ விக்கிரகங்கள். இல்லாமலும் இருப்பார்கள். 5இவற்றுக்குப்பின் இஸ்ரயேலர் மீண்டும் வந்து, தங்களது இறைவனாகிய கர்த்தரையும், அரசனாகிய தாவீதையும்#3:5 அரசனாகிய தாவீதையும் – தாவீதின் வம்சத்தை தேடுவார்கள். கடைசி நாட்களில் அவர்கள் கர்த்தரையும், அவருடைய ஆசீர்வாதங்களையும் நாடி, நடுக்கத்துடன் வருவார்கள்.
Currently Selected:
ஓசியா 3: TRV
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.